‘எந்திரன் 2’வை முந்தும் ரஜினி - தனுஷ் படம்!

ஷங்கரின் ‘2.0’ படத்திற்கு முன்பாக தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்

செய்திகள் 1-Sep-2016 12:25 PM IST Chandru கருத்துக்கள்

கபாலிக்குப் பிறகு தலைவர் ரசிகர்கள் அனைவரும் ‘எந்திரன் 2’வுக்காக ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தனுஷ் படத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதோடு, ‘கபாலி’ புகழ் ரஞ்சித்தே இப்படத்தையும் இயக்குவார் என போனஸ் இன்ப அதிர்ச்சியையும் கொடுத்தார்கள். இப்போது இப்படம் பற்றிய மேலும் ஒரு ஆச்சரியம் ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது. அது வேறொன்றுமில்லை... ஷங்கரின் ‘2.0’ படத்திற்கு முன்பாகவே, ரஜினி & ரஞ்சித் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ்.

காரணம்... இந்த வருட இறுதிக்குள் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டாலும், படத்தின் கிராபிக்ஸ் வேலைகளுக்கு நிறைய நாட்கள் ஆகும் என்பதால், படம் அடுத்த வருட தீபாவளிக்கே வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘2.0’ ரிலீஸுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால், அதற்குள் குறுகிய கால தயாரிப்பாக ரஞ்சித்தை வைத்து ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதே ரஜினியின் எண்ணமாம். அதற்காகவே தன் மருமகன் தனுஷ் படக்கம்பெனியில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளாராம். செப்டம்பர் மாத இறுதிக்குள் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;