அருண் விஜய்க்கு கௌதம் மேனன் பாராட்டு!

திரையுலக பிரமுகர்கள் பாராட்டில் ‘குற்றம் 23’

செய்திகள் 1-Sep-2016 12:32 PM IST VRC கருத்துக்கள்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் அருண் விஜய்யை ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடிக்க வைத்து, அவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய இயக்குனர் கௌதம் மேனன் சிறப்பு விருந்தினாரக கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட, அதனை அருண் விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ‘ஜெயம்’ ரவி பெற்றுக்கொண்டார். அதற்கு முன்பாக அருண் விஜய் குறித்து கௌதம் மேனன் பேசும்போது,

‘‘எந்தவொரு கேரக்டருக்கும் பொருத்தமான நடிகர் அருண் விஜய்! அவரிடம் பன்முக திறமைகள் இருக்கிறது. தான் ஏற்கும் கேரக்டருக்கு எந்தவொரு பிரிப்பரேஷனும் இல்லாமல் வந்து சிறப்பாக நடித்துக் கொடுக்க கூடிய ஆற்றல் அருணிடம் இருக்கிறது. இது அஜித் சாருக்கும் தெரியும் என்பதால் தான் அவரும் விக்டர் கேரக்டருக்கு அருண் விஜய்யை ஓகே சொன்னார். நான் நிறைய நடிகர்களை பார்த்திருக்கிறேன், இயக்கியிருக்கிறேன். ஆனால் அருண் விஜய்யை போன்று டெடிகேட்டட் ஆன ஒரு நடிகரை பார்த்ததில்லை. இயக்குனர் ஷங்கரின் சிஷ்யரான அறிவழகன் இந்த படத்தில் அருண் விஜய்யை வேறு ஒரு பரிமாணத்தில் காண்பித்திருக்கிறார். இப்படம் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

இவ்விழாவில் இயக்குனர்கள் சசி, மகிழ் திருமேனி, எஸ்.பி.ஜனநாதன், லக்‌ஷ்மி ராமகிருஷ்ண்ன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், பரத், ரியாஸ்கான், படத்தின் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், கதாநாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார், வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா மற்றும் விஜயகுமார், அபிநயா, அமித் பார்கவ், அரவிந்த் ஆகாஷ், சுஜா வாருண்ணி, மிஷா கோஷல் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
விழா இறுதியில் நடிகர் விஜயகுமார் நடிக்க வந்து 57 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டியும், கடந்த 29-ஆம் தேதி அவரது பிறந்த நாளை கொண்டாட முடியாமல் போனதால் அவரது பிறந்த நாளையும் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் ‘குற்றம் 23’ படக்குழுவினர்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;