பொதுவாகவே உச்சத்திலிருக்கும் ஒரு நடிகை உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடிப்பதையே விரும்புவார்கள். ஆனால், நடிகை நயன்தாரா இதில் வித்தியாசமானவர். இன்றைய தேதியில் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக நயன்தாரா இருந்தாலும், நடிகர்களைப் பார்த்து அவர் தனக்கான கதைகளைத் தேர்வு செய்வதில்லை. தன் கேரக்டருக்கும், கதைக்குமே முக்கியத்துவம் கொடுப்பவர் நயன் என்பது அவரின் சமீபத்திய படங்களே அனைவருக்கும் உணர்த்தியிருக்கும். அந்தவகையில், இப்போது அவரின் அடுத்த பட அறிவிப்பு மொத்த கோலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
ஆம்... நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் நயன்தாரா. கேமியோ ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ‘டிமான்டி காலனி’ அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில்தான் அதர்வாவும், நயன்தாராவும் நடிக்கவிருக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வசனங்களை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத, கலை இயக்கத்தை செல்வகுமார் கவனிக்க, எடிட்டிங் செய்கிறார் புவன் ஸ்ரீனிவாசன். இசையமைப்பாளர் யார் என்பது பற்றிய விவரத்தை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனத் தெரிகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘கோப்ரா’. விக்ரமின் 58-வது படமாக உருவாகி...
‘டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம்...
‘டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும்...