கபாலிக்கு பிறகு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் படம் ஷங்கரின் ‘2.0’. எந்திரன் 2ஆம் பாகமாக உருவாகிவரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பங்குபெறும் காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், தற்போது முக்கிய நடிகர்கள் இல்லாத சண்டைக்காட்சிகளை படமாக்கி வருகிறாராம் ஷங்கர். அந்தவகையில், தற்போது சென்னை சாலிகிராமத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறதாம் ‘2.0’ டீம்.
காட்சிப்படி, பாம் ஒன்றை வெடிக்கச் செய்து, உயர்ரக கார் ஒன்று அந்தரத்தில் பறக்குமாறு படமாக்கப்பட வேண்டுமாம். அதற்காக கன்டெய்னர் ஒன்றை வெடிக்க வைத்து படமாக்கியதாம் ஷங்கர் டீம். இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, சம்பந்தப்பட்ட ஏரியாவில் சப்தமும், புகைமண்டலமும் அதிகப்படியாக இருந்ததால் ஏரியாவாசிகள் சிரமத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. ஆனால், திட்டமிட்டபடி காட்சி தத்ரூபமாக வந்துள்ளதால் ஷங்கரும், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷாவும் ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டார்களாம். இந்த காட்சி திரையில் வரும்போது நிச்சயம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தைத் தரும் என்கிறார்கள் படப்பிடிப்பை நேரில் பார்த்தவர்கள்.
ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...