நடிகர் அருண் விஜய் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதாகவும், போலீஸில் சரணடையாமல் மறைந்திருப்பதாகவும் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டன. ஆனால் இதையெல்லாம் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அருண்விஜய். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. ‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், க்ரைம் ரைட்டர் ராஜேஷ்குமாரின் நாவல் ஒன்றைத் தழுவி படமாக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால், திடீரென இசைவெளியீட்டு விழாவை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்ததால், எழுத்தாளர் ராஜேஷ்குமாரால் இந்த விழாவில் பங்குகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் ஒன்றை எழுதியுள்ளார் அவர். அதில்...
‘‘நான் எழுதிய நாவல் ஒன்று ‘குற்றம் 23’ என்னும் தலைப்பில் திரைப்படமாக உருவாகி இன்று சத்யம் தியேட்டரில் இசை வெளியீட்டு விழா. டைரக்டர் அறிவழகன் எனக்கு போன் செய்து நீங்கள் விழாவில் கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும். மேடையில் உங்களை அமர வைத்து ஒரு நல்ல கதையைக் கொடுத்ததற்காக நான் மனதார பாராட்டி உங்களை கௌரவிக்க வேண்டும் என்று பெரிதும் விருப்பப்பட்டார். ஆனால் விழா கடைசி நேரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டதால் ரயில், விமான டிக்கெட் எதுவும் கிடைக்காத காரணத்தால் என்னால் சென்னை செல்ல இயலவில்லை. இருப்பினும் டைரக்டர் அறிவழகன் என் மீது கொண்ட அன்புக்கும், பாசத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...
‘துருவங்கள் பதினாறு’படப்புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி...