‘கணிதன்’ தந்த உற்சாகத்தில் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. ருக்குமணி வண்டி வருது, செம போத ஆகாத ஆகிய படங்களோடு இப்போது ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனு’ம் படத்திலும் நடிக்கிறார் அதர்வா. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இப்படத்தை ஓடம் இளவரசு இயக்குகிறார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். லேட்டஸ்ட் தகவல் ஒன்றின்படி இப்படத்தில் மொத்தம் 4 ஹீரோயின்களாம்.
‘சகுனி’ ப்ரணிதா சுபாஸ், ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கயல்’ ஆனந்தி, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம். இவர்களுடன் ‘மொட்ட’ ராஜேந்திரன், சூரி, மயில்சாமி ஆகியோரும் நடிப்பதாகத் தெரிகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறதாம். இந்த வருட இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது “காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இப்படம் உருவாகி வருகிறது. மேலும் பெண்களின் முதல் காதல் அவர்களின் வாழ்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்திருக்கிறோம். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரையில் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் தற்போதுநடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” இத்திரைப்படத்தை அம்மா கிரியேஷன் T.சிவா உடன் 2MB நிறுவனம் சார்பாக ரகுநாதன்.P.S, R.சந்திரசேகர் மற்றும் R.சரவண குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.
‘பூமராங்' படத்தில் இணைந்த இயக்குனர் கண்ணனும் அதர்வாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும்...
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
‘பூமராங்' படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணனும், அதர்வும் இரண்டாவது குறையாக இணைந்துள்ள படத்தின்...