ஆர்யாவுடன் இணையும் ‘பிச்சைக்கரன்’ பட ஹீரோயின்?

ஆர்யா, அமீர் படத்தில் ‘பிச்சைக்காரன்’ பட கதாநாயகி?

செய்திகள் 31-Aug-2016 3:23 PM IST VRC கருத்துக்கள்

ஜெயம்’ ரவியை வைத்து ’ஆதி பகவன்’ என்ற படத்தை இயக்கிய அமீர் அடுத்து ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். தற்போது ‘மஞ்சபை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ என்ற படத்தில் நடித்து வரும் ஆர்யா, இப்பட வேலகள் முடிந்ததும் அமீர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தைப் போன்றே இப்படமும் மதுரை பின்னணியில் உருவாகவிருக்கிறதாம். இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி நடிகையின் தேர்வும் முடிந்து விட்டது என்று கூறப்படுகிறது. விஜய் ஆன்டனியுடன் ‘பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவரும், தற்போது ‘கயல்’ சந்திரனுடன் ‘திட்டம போட்டு திருடுற கூட்டம்’ படத்தில் நடித்து வருபவருமான சாத்னா டைட்டஸாம் அமீர், ஆர்யா கூட்டணி அமைக்கும் புதிய படத்தின் கதாநாயகி! இந்த படம் குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;