கிரிக்கெட் போட்டியில் வெளியாகும் ‘எமன்’ பாடல்!

திருநெல்வேலி கிரிக்கெட் போட்டியில் ‘எமன்’ பாடல்

செய்திகள் 31-Aug-2016 2:49 PM IST VRC கருத்துக்கள்

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கிற படம் ‘சைத்தான்’. இந்த படத்துடன் ‘எமன்’ படத்திலும் நடித்து வந்தார் விஜய் ஆன்டனி. ‘நான்’ படப் புக்ழ ஜீவா சங்கர் இயக்கி வரும் ‘எமன்’ படத்தில் இடம் பெறும் ‘என் மேல கைய வச்சா காலி’ என்று துவங்கும் பாடலை விஜய் ஆண்டனி இசை அமைத்து பாடியுள்ளார். இந்த பாடல் விநாயக சதுர்த்தியன்று வெளியாகவிருக்கிறது என்ற தகவலை நாம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த பாடலை வித்தியாசமான முறையில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் திருநெல்வேலியில் வருகிற 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 'லைக்கா கோவை கிங்ஸ்' - 'சேப்பாக் சூப்பர் கில்லிஸ்' அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இடையே பாடலை வெளியிடுகிறார்கள். கிரிக்கெட் போட்டி காண வரும் ரசிகர்களுக்கு இந்த பாடலும் ஒரு விருந்தாக அமையும் என்கின்றனர் ‘எமன்’ படக்குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;