சிவகார்த்திகேயன், நயன்தாரா படத்தில் புன்னகை இளவரசி?

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் சினேகாவும் நடிக்கிறாராம்

செய்திகள் 31-Aug-2016 12:02 PM IST Chandru கருத்துக்கள்

‘தனி ஒருவன்’ படத்தின் சூப்பர் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் புதிய படமொன்றை இயக்குகிறார் மோகன் ராஜா. ஆர்.டி.ராஜாவின் ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களோடு முக்கிய வேடமொன்றில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் நடிக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்தில் லேட்டஸ்ட்டாக ‘புன்னகை இளவரசி’ சினேகாவும் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

திருமணம், குழந்தை பிறப்பு என படங்களில் நடிப்பதற்கு தற்காலிக இடைவெளிவிட்டிருந்த சினேகா, இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பியிருக்கிறார். மோகன் ராஜா படத்துடன், பிருத்விராஜ் தயாரிப்பில் மம்முட்டி நடிக்கும் ‘தி கிரேட் ஃபாதர்’ என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார் சினேகா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;