ஆர்யா, மாதவன், அமலா பால் கூட்டணி அமைக்கும் சென்னை ராக்கர்ஸ்!

நாசர் அறிமுகம் செய்து வைத்த ‘சென்னை ராக்கர்ஸ்’ அணி!

செய்திகள் 31-Aug-2016 11:38 AM IST VRC கருத்துக்கள்

செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டியை போன்று செலிபிரிட்டி பாட்மின்டன் போட்டியும் விரைவில் நடைபெறவிருக்கிறது. ‘செலிபிரிட்டி பாட்மின்டன் லீக் சீசன்’ (CBL) என்ற பெயரில் நடக்கவிருக்கும் இந்த போட்டி சென்னை, ஹைதராபாத், கொச்சி, பெங்களூரு ஆகிய ஊர்களில் நடைபெற்று, இறுதி போட்டி மலேசியாவிலுள்ள கோலாலம்பூர் நகரத்தில் நடக்கவிருக்கிறது.

இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் விளையாடவிருக்கும் வீரர்களை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவை சேர்ந்த கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியில் கேப்டனாக ஆர்யா பங்கு பெற, பரத், பிரசன்னா, அபிநய் வட்டி, அமிதாஷ், முன்னா, சாந்தனு, வைபவ், காயத்ரி, இனியா, ரூபா மஞ்சரி ஆகியோர் விளையாட இருக்கிறார்கள். இந்த அணியின் விளம்பர தூதராக மாதவன் பொறுப்பேற்க, அணி ஊக்குவிப்பாளராக அமலா பால் பொறுப்பேற்றுள்ளார். இவர்களை நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து நாசர் பேசும்போது,

‘‘நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் பெற்று வந்து நம் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் சிந்து! அந்த மகிழ்ச்சியுடன் இந்த அணியினரை அறிமுகப்படுத்தி வைப்பதில் நான் பெருமை அடைகிறேன். நடிகர் சங்க வளாகம் கட்டுவதற்காக என் பிள்ளைகள் ஒன்றாக களமிறங்கி கிரிக்கெட் விளையாடியதை என்னால் மறக்கவே முடியாது. அந்த போட்டி மூலம் எங்களுக்குள் மேலும் ஒரு அந்நியோன்யம் பிறந்தது. இந்த பாட்மின்டன் போட்டியில் விளையாடவிருக்கும் அனைவரும் போட்டியில் சிறப்பாக விளையாடி, வெற்றிவாகை சூட என் வாழ்த்துக்கள்‘’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;