ஆரிக்கு ஜோடியாகும் சந்தானம் பட ஹீரோயின்!

சந்தானத்தை தொடர்ந்து ஆரிக்கு ஜோடியாகும் அஷ்னா சவேரி!

செய்திகள் 31-Aug-2016 11:04 AM IST VRC கருத்துக்கள்

சென்னையில் இயங்கி வந்த நாகேஷ் திரையரங்கத்தின் பின்னணியில் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் முகமுது இசாக் இயக்கும் இப்படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார் என்றும், அவருக்கு அம்மாவாக பானுப்ரியா நடிக்கிறார் என்றும் ஓரிரு நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்பொது இந்த படத்தில் ஆரியுடன் கதாநாயகியாக அஷ்னா சவேரி நடிக்க ஓப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ’இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களில் சந்தானத்துடன் இணைந்து நடித்த அஷ்னா சவேரி தான் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகானாக நடிக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் ஹீரோயின்! சந்தானம், காளிதாஸ் ஜெயாராமை தொடர்ந்து அடுத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ மூலம் ஆரிக்கு ஜோடியாகிறார் அஷ்னா சவேரி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;