சகாயமாக பிரகாஷ் ராஜ்!

நிவின் பாலி படத்தில் சகாயமாக பிரகாஷ்ராஜ்!

செய்திகள் 31-Aug-2016 10:38 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘யு-டர்ன்’ படப் புகழ் ஷ்ரதா ஸ்ரீநிவாஸ் கதாநாயகியாக நடிக்க, ‘சுட்ட கதை’ படப் புகழ் லஷ்மி பிரியா, சந்திரமௌலி ஆகியோரும் நடிக்க இப்போது முன்றாவது கட்ட படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜும் இணைந்துள்ளார். இவரது கேரக்டர் பெயர் கே.ஜே.சகாயம். . பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட ஐம்பது சதவிகித காட்சிகளை மணப்பாடு மற்றும் குற்றாலாம் பகுதிகளில் படமாக்கி வருகிறார் இயக்குன்ர் கௌதம் ராமச்சந்திரன். நிவின் பாலியின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். கதைப்படி இவர்களுக்கு என்றுமே ஒத்துப் போகாதாம். தந்தை மகனாக இருந்தாலுஅம் இவர்கள் பெரும்பாலும் ஆலய வழிப்பாடின்போது மட்டும் தான் அதிகமாக சந்திப்பார்களாம்! அடுமாதிரியான கதையாம் இப்படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;