‘தனி ஒருவன்’ படத்தின் சித்தார்த் அபிமன்யூ கேரக்டர் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக களமிறங்கிய சித்தார்த் அபிமன்யூ தற்போது ‘போகன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றையும் வெற்றிகரமாக தொகுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது ‘சதுரங்க வேட்டை’ படத்தின் 2ஆம் பாகத்தில் அர்விந்த் சாமியை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர், இயக்குனர் மனோபாலா தயாரித்து, திருப்பதி பிரதர்ஸ் வெளியீட்டில் வெளிவந்த படம் ‘சதுரங்க வேட்டை’. நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழகத்தில் நடக்கும் சில முக்கிய மோசடிகளை கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தின் 2ஆம் பாகத்தையும் விரைவில் எடுக்கப்போவதாக மனோபாலா அறிவித்திருந்தார். படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் அர்விந்த் சாமி நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு நினைத்திருப்பதால், அவரிடம் இப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம். அவருக்கு வில்லன் கதாபாத்திரமா? அல்லது நாயகன் கதாபாத்திரமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரித்திகா சிங், நந்திதா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம்...
‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து லக்ஷமண் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படம்...
சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படம் குறித்த தகவல்களை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம்....