ஒரு அறையில் எடுக்கப்பட்ட படம் ‘தாயம்’

‘தாயம்’ படத்தில் புதுமை!

செய்திகள் 30-Aug-2016 2:25 PM IST VRC கருத்துக்கள்

ஒரு காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடிய விளையாட்டு தாயம். இந்த பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது. ‘பியூச்சர் ஃபிலிம் ஃபேக்டரி இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் என்பவர் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கியுள்ளார். குறும்படங்களை இயக்கிய அனுவபவத்துடன் ‘தாயம்’ படத்தை இயக்கியுள்ள கண்ணன் ரங்கசாமி, இப்படத்தில் ஒரு புதுமையை செய்துள்ளார். அதாவது, ‘தாயம்’ முழு படத்தையும் ஒரே அறையில் படமாக்கியுள்ளார். ‘இது இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறை’ என்று கூறும் இயக்குனர் கண்ணன் ரங்கசாமி மேலும் ‘தாயம்’ குறித்து பேசுகையில், ‘‘ஒரு நேர்காணலுக்கு வரும் 8 இளைஞர்கள் ஒரு அறையில் மாட்டிக் கொள்கிறார்கள்! அந்த நேர்காணல் என்ன? அவர்கள் எப்படி ஒரே அறையில் மாட்டிக் கொள்கிறார்கள்? என்பது தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை. அதனை ஹாரர், சஸ்பென்ஸ், த்ரில்லர் ரக படமாக இயக்கியுள்ளேன்’’ என்கிறார்.

இப்படத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ பட புகழ் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, புதுமுகம் அய்ரா அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பாஜி ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசை அமைப்பாளர் சதீஷ் செல்வம இசை அமைக்கிறார். ‘ஜீரோ’ படத் தொகுப்பாளர் சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை ‘உறுமீன்’ படப் புகழ் வினோத் ராஜ்குமார் காவனித்துள்ளார். ‘தாயம்’ விரைவில் திரைக்கு வருமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;