‘துப்பறிவாள’னில் விஷாலுடன் களமிறங்கும் பிரசன்னா!

மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் பிரசன்னா!

செய்திகள் 30-Aug-2016 12:46 PM IST VRC கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில், ‘அஞ்சாதே’ படத்தில் வில்லனாக நடித்த பிரசன்னா 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விஷாலை வைத்து மிஷ்கின் அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. விஷால், தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 12-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. மிஷ்கினும், விஷாலும் முதன் முதலாக இணையும் இப்படத்தில் வில்லன் கேரக்டரை ஏற்கவிருப்பவர் பிரசன்னா தானாம்! இதனை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். பிரசன்னா நடிப்பில் உருவாகிவரும் ‘காலகூத்து’, ‘நிபுணன்’ ஆகிய படங்களை தொடர்ந்து சுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப் பயலே-2’விலும் நடிக்கவிருக்கிறார் பிரசன்னா! இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;