‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படக்குழுவினரை பாராட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்!

‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படப்பிடிப்பில் பிரபல கிரிக்கெட் வீரர்!

செய்திகள் 30-Aug-2016 12:15 PM IST VRC கருத்துக்கள்

‘மூவி பஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் இப்படத்தில் ‘கயல்’ சந்திரன், சாத்னா டைட்டஸ் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்ட கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. அப்போது அந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருந்த பல அரிய பொக்கிஷங்களான விருதுகள், கேடயங்கள், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கையொப்பம் இட்ட மட்டைகள், பந்துகள், வீரர்களின் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை பார்க்க தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை சிறந்த ஆட்டக்காரரான ஜான்டி ரோட்ஸ் வந்திருந்தார். அப்போது அங்கு நடைபெற்று கொண்டிருந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு படக்குழுவினருடன் உற்சாகமாக உரையாடி, படம் சம்பந்தப்பட்ட விவரங்களை கேட்டறிந்து படக்குழுவினரை வாழ்த்தினர்.

இது குறித்து இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருபவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவருமான ஜே.கே.மஹேந்திரா கூறும்போது, ‘‘அடிப்படையில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீர்ரான எனக்கு கிரிக்கெட் தான் உலகம். அந்த கிரிக்கெட் விளையாட்டை பெருமைப்படுத்தும் விதமாக நான் ஆரம்பித்த இந்த கிரிக்கெட் அருங்காட்சியகத்துக்கு ஜான்டி ரோட்ஸ் வருகை தந்தது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அத்துடன் எங்கள் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு வாழ்த்தியதும் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;