மருத்துவ மாணவர்களுக்கு ‘தர்மதுரை’யின் ஆஃபர்!

‘தர்மதுரை’யை இலவசமாகும் பார்க்கும் வாய்ப்பு!

செய்திகள் 30-Aug-2016 10:52 AM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் முலானோர் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘தர்மதுரை’. மருத்துவம் மற்றும் மருத்துவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மருத்துவம் மற்றும் டாக்டர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது போன்ற சமூக கருத்துக்கள் இப்படத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இப்படத்தை மருத்துவம் படித்து வரும் மாணவ, மாணவியர் பார்த்து பயன்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இப்படத்தை இலவசமாக பார்க்க தர்மதுரை படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். ‘தர்மதுரை’யை இலவசமாக பார்க்க விரும்பும் மாணவர்கள் தங்களது அடையாள அட்டையை +91 95660 42832 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்தால் போதும். ‘தர்மதுரை’க்கான இலவச டிக்கெட் அவர்களை தேடி வரும். இதனை ‘தர்மதுரை’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;