ரஜினியின் வார்த்தைக்காக காத்திருக்கும் ஜாக்கி சான்!

'இரு கில்லாடிகள்' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்ப்பாரா... ஜாக்கிசான் ஆவல்!

செய்திகள் 30-Aug-2016 10:16 AM IST Chandru கருத்துக்கள்

ஜாக்கி சான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் (Skip Trace) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள ஸ்கிப் டிராஷ் படம் தமிழில் ‘இரு கில்லாடிகள்’ என்ற பெயரில் வெளியாகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர் ‘இரு கில்லாடிகள்’ படத்தை செப்டம்பர் 2ம் தேதி வெளியிடுகிறார். சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை சீனாவில் வெளியான அன்றே திரையரங்கிற்கு சென்று பார்த்து பாராட்டினார் ஜாக்கிசான். அவர் நடித்த ‘ஸ்கிப் டிராஷ்’ படமும் அன்றே ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் 2 அன்று வெளியாகும் இந்த இரு கில்லாடிகள் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்ப்பாரா, பார்த்துவிட்டு என்ன சொல்வார் என்று ஜாக்கிசான் ஆவலாக உள்ளதாக அவரது தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;