சென்சார் முடிந்தது... ரிலீஸ் பரபரப்பில் ‘இருமுகன்’!

விக்ரம், நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இருமுகன்’ படத்தின் சென்சார் நேற்று நிறைவுபெற்றுள்ளது

செய்திகள் 30-Aug-2016 10:07 AM IST Chandru கருத்துக்கள்

‘புலி’ தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இருமுகன்’. ஆக்ஷன் ஹீரோ, திருநங்கை வில்லன் என இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, நித்யா மேனன் நாயகிகளாக நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வெளியான ‘இருமுகன்’ பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சென்சார் நேற்று நடைபெற்றது. கெமிக்கல் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படமான இருமுகனுக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை உலகமெங்கும் செப்டம்பர் 8ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக கேரளாவில் நேற்று புரமோஷனில் ஈடுபட்டுள்ளது ‘இருமுகன்’ படக்குழு. நேற்று பிரத்யேக ஹெலிகாப்டர் ஒன்றில் கேரளா சென்று ரசிகர்களைச் சந்தித்துள்ளார் விக்ரம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;