மீண்டும் மகிழ்ச்சிக் கூட்டணி : சூப்பர்ஸ்டாருடன் இணைந்த தனுஷ்!

‘கபாலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினியை மீண்டும் இயக்குகிறார் ரஞ்சித். படத்தை தயாரிக்கிறார் தனுஷ்

செய்திகள் 30-Aug-2016 9:52 AM IST Chandru கருத்துக்கள்

ரஜினியின் கடந்த 15 வருட சினிமா கேரியரை எடுத்துக் கொண்டால், ஒரு படம் முடிந்து குறைந்தது ஒரு வருடங்களுக்குப் பிறகே அவரின் அடுத்த பட அறிவிப்பு வெளிவரும். ஆனால், ‘எந்திரன்’ 2ஆம் பாகத்தின் அறிவிப்புக்குப் பின்னர், திடீரென அறிவிக்கப்பட்டு மளமளவென உருவாகி, ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகி, வசூல் மழை பொழிந்த படம் ‘கபாலி’. இப்போது ‘எந்திரன் 2’ படத்திற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தன் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் தனுஷ். இப்படத்தையும் ‘கபாலி’ புகழ் பா.ரஞ்சித்தே இயக்கவிருக்கிறார்.

ஷங்கர் இயக்கிவரும் ‘2.0’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் செப்டம்பரில் நிறைவடையும் எனத் தெரிகிறது. அதன்பிறகு, தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சித்தின் இந்த புதிய படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும்? டெக்னீஷியன்கள் யார் யார்? நாயகி யார்? என்பன போன்ற விஷயங்களுக்காக ரஜினி ரசிகர்கள் ‘மகிழ்ச்சி’யுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;