உதவி செய்ததாக பொய்யான செய்தி : நேர்மையாக மறுத்த விஜய்சேதுபதி!

ஏழை குழந்தைகளுக்கு தான் உதவி செய்ததாக வெளிவந்த தவறான செய்தியை நடிகர் விஜய்சேதுபதி மறுத்துள்ளார்

செய்திகள் 29-Aug-2016 11:33 AM IST Chandru கருத்துக்கள்

நடிகர் விஜய்சேதுபதியிடம் அவரது ரசிகர்களுக்கு பிடித்த விஷயமே அவரின் எளிமையான, நேர்மையான பண்புதான். அந்த பண்பை நிரூபிக்கும் வகையில், பிரபலரங்கள் யோசிக்க நினைக்கும் காரியம் ஒன்றை செய்துள்ளார். இணையதளம் ஒன்றில், ‘‘விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘தர்மதுரை’. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அப்படியே ஏழை குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துவிட்டாராம். இதை அறிந்த பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். (சூப்பர் விஜய் சேதுபதி)’’ என செய்தி வெளியிட்டிருந்தனர்.

இந்த செய்தியை அறிந்த விஜய்சேதுபதி, அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, ‘‘இந்த செய்தி உண்மையல்ல... மன்னிக்கவும்!’’ என நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். அவரின் இந்த நேர்மையை வெகுவாகப் பாராட்டி ரசிகர்கள் அவரது ஸ்டேட்டஸில் கமென்ட் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;