நாளை மறுநாள் விக்ரம் பிரபுவின் வீரசிவாஜி!

’வீரசிவாஜி’ டிரைலர், பாடல்கள் எப்போது?

செய்திகள் 29-Aug-2016 11:22 AM IST VRC கருத்துக்கள்

‘தகராறு’ படப் புகழ் கணேஷ் விநாயக் இயக்கி வரும் படம் ‘வீரசிவாஜி’. விக்ரம் பிரபு, ஷாம்லி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த மாதம் 23-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளன. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை வருகிற 31-ஆம் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். டி.இமான் இடை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை சுகுமார் கவனித்துள்ளார். ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. ‘வாகா’ படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகும் இந்த ‘வீரசிவாஜி’ ஷாம்லி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் படமுமாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வீரசிவாஜி - டிரைலர்


;