‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடித்து வரும் படங்கள் ‘சைத்தான்’, ‘எமன்’. இதில் ‘சைத்தான்’ பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படம் அடுத்த மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘எமன்’ படத்தின் வேலைகளும் படு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. விஜய் ஆன்டனி நடிப்பில் ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கி வரும் ‘எமன்’ படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘என் மேல கையை வச்சா காலி…’ என்று துவங்கும் சிங்கிள் டிராக்கை விநாயகசதுர்த்தியன்று வெளியிடவிருக்கிறார்கள். விஜய் ஆன்டனி நடித்து வெற்றிபெற்ற ‘சலீம்’ படம் வெளியானது 2014 ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தியை முன்னிட்டு தான்! ‘சலீம்’ படத்தின் விநாயகசதுர்த்தி சென்டிமென்ட் இப்போது விஜய் ஆன்டனியின் எமனிலும் தொடர்கிறது.
’பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு...
விஜய் ஆண்டனி நடித்து வரும் படங்கள் ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘காக்கி’. இதில் பாபு...
ஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’, ‘எமன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆல்பர்ட் ராஜா....