சமுத்திரக்கனி உதவியாளர் இயக்கும் ‘கடலை போட பொண்ணு வேணும்’

கடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ!

செய்திகள் 29-Aug-2016 10:21 AM IST VRC கருத்துக்கள்

‘ரீங்காரம்’ என்ற படத்தை இயக்கி முடித்த கையோடு ‘கடலை போட பொண்ணு வேணும்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் சிவகார்த்திக். இயக்குனர்கள் சமுத்திரக்கனி, சி.ஜே.பாஸ்கர், சுரேஷ் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த சிவகார்த்திக் ‘கடலை போட பொண்ணு வேணும்’ படம் குறித்து பேசும்போது,

‘‘இந்த உலகத்தில் ஒட்டு மொத்த பிரச்சனைகளுக்கும் காரணம் இரண்டே விஷயங்கள் தான். ஒண்ணு மண்ணு, இன்னொன்று பொண்ணு. மண்ணுக்காக நடந்த சண்டைகளை விட பொண்ணுக்காக நடந்த சண்டைகள் தான் அதிகம். மதுரையில் இருக்கிற ஒரு பையனுக்கு மற்ற பசங்க மாதிரி ஒரு பொண்ணுடன் கடலை போட ஆசை! சென்னை போனால் தன்னோட ஆசை நிறைவேறி விடும் என்று அந்த பையன் சென்னை கிளமாபி வருகிறார். சென்னை வந்த அவனோட ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதை கதைக்களமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. ஆதித்யா டி.வி.தொகுப்பாளர் அஸார் ஹீரோவாக நடிக்கிறார். மனீஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் படவா கோபி, லொள்ளு சப்பா சுவாமி நாதன், மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் கவனிக்க, சுதர்சன் இசை அமைக்கிறார். ரீங்காரம் படத்தை தயாரித்தவர் தான இப் படத்தையும் தயாரித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;