பலரது பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜோக்கர்’ படத்தை தொடர்ந்து ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வரவிருக்கிறது கார்த்தியின் ‘காஷ்மோரா’. தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் இப்படதின் டப்பிங் வேலைகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இப்போது ‘காஷ்மோரா’வின் அனைத்து டப்பிங் வேலைகளும் முடிந்து விட்டது என்று கார்த்தி ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பதில், ‘’Completed dubbing for #Kaashmora.One of the most challenging and tiring experiences after #Aayirathiloruvan.But very gratifying’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கோகுல் இயக்கத்தில் கார்த்தி மூன்று வேடங்களில் நடித்திருக்கும் ‘காஷ்மோரா’வில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா கதாநாயகிகளாக நடிக்க, கார்த்தியின் அப்பாவாக விவேக் நடித்துள்ளார். இசைக்கு சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவுக்கு ஓம்பிரகாஷ், கலை இயக்கத்துக்கு ராஜீவன் என்று கூட்டணி அமைத்துள்ள இப்படம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்களுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளன! தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் ‘காஷ்மோரா’ மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...