மிஷ்கின் இயக்கி வரும் ‘சவரக்கத்தி’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதைப்போல விஷால் நடித்து வரும் ‘கத்திசண்டை’ தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகளும் சூடு பிடித்துள்லது. இந்நிலையில் மிஷ்கினும், விஷாலும் இணையும் ‘துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பையும் விரைவில் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதாவது ‘துப்பறிவாளன்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 12 ஆம் தேதி சென்னையில் துவங்குமாம். விஷாலாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சென்ற மார்ச் மாதம் 10-ஆம் தேதி சென்னையில் நடந்தது. மிஷ்கினும் விஷாலும் முதன் முதலாக இணையும் இப்படத்தில் கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார் என்றும் இப்படத்திற்கு மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’ படத்திற்கு இசை அமைத்த அரோல் கரோலி இசை அமைக்கிறார் என்றும் நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் 40-க்கும் மேற்பட்ட...
நடிகர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தவர் மறைந்த இப்ராகிம் ராவுத்தர்! இவரது...
இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘இளையராஜா 75’ என்ற பெயரில் மிகப்பெரிய பாராட்டுவிழா ஒன்றை...