அப்புக்குட்டி நடிக்கும் ‘கொஞ்சம் கொஞ்சம்’

அக்கா, தம்பி உறவை சொல்லும் கொஞ்சம் கொஞ்சம்!

செய்திகள் 27-Aug-2016 11:43 AM IST VRC கருத்துக்கள்

பிரபல மலையாள பட இயக்குனரும், தேசிய விருது பெற்றவரும், தமிழில் ‘கஸ்தூரிமான்’ படத்தை இயக்கியவருமான மறைந்த லோகித தாஸிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் உதய் சங்கரன். இவர் முதன் முதலாக இயக்கும் முதல் தமிழ் படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’. அக்கா, தம்பி உறவை மையமாக வைத்து எடுக்கப்படும் படமாம் இது. இப்படத்தில் அக்காவாக ப்ரியா மோகன் நடிக்கிரார். தம்பியாக புதுமுகம் கோகுல் நடிக்கிறார். இவர்களுடன் அப்புக்குட்டி, மன்சூர் அலிகான், மதுமிதா, சிவதாணு ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா எல்லை பகுதியில் நடைபெறும் கிராமத்து கதையாம் ‘கொஞ்சம் கொஞ்சம்’. படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தில் அப்புக்குட்டிக்கு மிக முக்கியமான கேரக்டராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தெரு நாய்கள் - டிரைலர்


;