விக்ரமின் ‘இருமுகன்’ ரிலீஸ் எப்போது?

சென்சார் ரிசல்ட்டுக்கு காத்திருக்கும் இருமுகன்!

செய்திகள் 27-Aug-2016 11:36 AM IST VRC கருத்துக்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேன்ன் முதலானோர் நடித்துள்ள ’இருமுகன்’ படத்தின் வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரகி வருகிறது. சென்சார் குழுவினரின் பார்வைக்கு எடுத்துச் சென்றுள்ள இப்படம் ஓரிரு நாட்களில் சென்சார் ஆகி விடுமாம். இப்படத்தை முதலில் செப்டம்பர் -1 அல்லது 2-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். ஆனால் படத்தின் சென்சார் முடிவடைய கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால் இருமுகனை ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்ய முடிவு செயதிருக்கிறார்கள். அதாவது, இருமுகனின் சென்சார் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் பட்சத்தில் ‘இருமுகன்’ செப்டம்பர் 8 அல்லது 9-ல் திரைக்கு வந்துவிடும் என்கிறார்கள். ‘தமீன் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷிபு தமீன் தயாரித்துள்ளா இப்படத்தின் பெரும்பாலான ஏரியாக்களின் வியாபாரமும் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;