‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘ரெமோ’ திரைப்படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் முதல் வாரம் வெளியாகவிருக்கிறது. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், சிங்கிள் டிராக் ஆகியவற்றுக்கு ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளன. நாளுக்கு நாள் இப்படி கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ‘ரெமோ’வின் பாடல்களை அடுத்த மாதம் (செப்டம்பர்) 5ஆம் தேதி வெளிளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதனை இப்படத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜாவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன் ‘ரெமோ’வை பார்த்த ஆர்.டி.ராஜாவுக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதால் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அடுத்த படத்தையும் அவரே தயாரிக்க முடிவு செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும்...
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...