‘நெருப்புடா’ பாடலை தொடர்ந்து ‘ஆடுகள்’ பற்றிய பாடல்!

ஆதி, நிக்கி கல்ராணி நடிக்கும் ‘மரகத நாணயம்’ படத்தில் ஆடுகள் பற்றிய பாடல்!

செய்திகள் 26-Aug-2016 10:47 AM IST VRC கருத்துக்கள்

‘யாகவராயினும் நா காக்கா’ படத்தை தொடர்ந்து ஆதி, நிக்கி கல்ராணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்திய ஒரு சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கும் இப்படத்திற்கு ‘மரகத நாணயம்’ என்று பெயரிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் திபு இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக ‘நெருப்புடா…’ பாடல் புகழ அருண்ராஜா காமராஜ் ஆடுகளை மையப்படுத்தி ஒரு பாடலை எழுதி பாடியிருக்கிரார். ஜமுனா பாரி, பீட்டல், பார்பாரி, தெல்லிச்சேரி, பெராரி என எல்லா ரக ஆடுகளின் பெயர்களையும் இப்பாடலில் உள்ளடக்கி எழுதி பாடி இருக்கிறார் அருண்ராஜா காமராஜ். அத்துடன் இப்பாடலுக்காக ஆடுகளின் குரலை பிரத்தியேகமாக பதிவும் செய்துள்ளார் அருண்ராஜா காமராஜ். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;