விஷால் பிறந்த நாளில் கத்திசண்டை!

விஷால் பிறந்த நாளில் கத்திசண்டை சிங்கிள் ட்ரீட்!

செய்திகள் 26-Aug-2016 10:27 AM IST VRC கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடியாக நடிக்கும் ‘கத்திசண்டை’ தீபாவளி ரிலீசாக திரைக்கு வரவிருப்பதால் இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கும் இப்படத்தின் சிங்கிள் டிராக்கை விஷாலின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29-ஆம் வெளியிடவிருக்கிறார்கள். விஷாலுடன் தமன்னா முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்தில் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். ‘ரோமியோ ஜுலியட்’, விரைவில் ரிலிசாகவிருக்கிற ‘வீரசிவாஜி’ ஆகிய படங்களை தயாரித்த ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சாபில் நந்தகோபால் தயாரிக்கும் ‘கத்திசண்டை’யின் ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;