‘சதுரங்கவேட்டை’யை தொடர்ந்து ‘போங்கு’

‘போங்கு’ காட்டும் நட்டி நட்ராஜ்!

செய்திகள் 24-Aug-2016 1:13 PM IST VRC கருத்துக்கள்

’நட்டி’ நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘போங்கு’. கலை இயக்குனர் சாபு சிரிலின் உதவியாளர் தாஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் இப்படம் ஹைடெக் கார்களை திருடும் நான்கு பேரை பற்றிய அதிரடி ஆக்‌ஷன் கதையாகும். இப்படத்தில் கதாநாயகியாக ருஹி சிங் நடித்துள்ளார். இவர்களுடன் அதுல் குல்கர்னி, ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ், அர்ஜுன், சரத் லோகித்ஷ்வா, ராஜன், மனிஷா, மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஸ்ரீ என்ற பெயர் மாற்றத்துடன் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இப்படதின் பாடல்கள் வெளியிட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. பாடல்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு வெளியிட, இயக்குனர் லிங்குசாமி பெற்று கொண்டார்.
விழாவில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, லிங்குசாமி, பார்த்திபன், விஜய் மில்டன், ரவி மரியா, சிபிராஜ் உட்பட அனைவருமே இப்படத்திற்கு மாறுபட்ட வகையில் வைக்கப்பட்டிருக்கும் ‘போங்கு’ என்ற தலைப்பு குறித்து தான் பேசினார்கள்! லிங்கு சாமி பேசும்போது, ‘நட்டி’ நட்ராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘சதுரங்க வேட்டை’ படத்தை விட இப்படம் சிறப்பாக வந்துள்ளதாக நான் நினைக்கிறேன். இந்த படம் ‘சதுரங்கவேட்டை’யை விட மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்றார் லிங்குசாமி!

‘ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட்‘ பட நிறுவனம் சார்பாக திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பாடல்களை தாமரை, கபிலன், மதன் கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;