அருண் விஜய்யின் ‘குற்றம் 23’ படப் பாடல்கள் வெளியாகும் தேதி?

செப்டம்பர் 1-ல் ‘குற்றம் 23’ன் பாடல்கள், டிரைலர்!

செய்திகள் 24-Aug-2016 12:32 PM IST VRC கருத்துக்கள்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘குற்றம் 23’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ‘ஐஸ் இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் ஆர்த்தி அருண் தயாரிக்கும் இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மெடிக்கல் கரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் பவர்ஃபுல் வில்லனாக நடித்த அருண் விஜய் அந்த கேரக்டருக்கு நேர்மாறாக இப்படத்தில் பவர்ஃபுல்லான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஏற்கெனவே அருண் விஜய் நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்றாலும் இப்படத்தின் கதையும், அருண் விஜய்யின் கேரக்டரும் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளதாம். ‘இந்த படம் அருண் விஜய்யை வேறு ஒரு தளத்துக்கு அழைத்து செல்லும்’ என்கின்றனர் படக்குழுவினர். அருண் விஜய் நடித்துள்ள ‘வா டீல்’ படமும் ரிலீசாகவிருக்கிற நிலையில் இந்த ‘குற்றம்-23’ படமும் அதி விரைவில் வெளியாகும் என்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;