மம்முட்டி, சினேகா ஜோடிக்கு வில்லனாகும் ஆர்யா?

மம்முட்டிக்கு வில்லனாகிறார் ஆர்யா!

செய்திகள் 24-Aug-2016 10:19 AM IST VRC கருத்துக்கள்

‘மஞ்சபை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ என்ற படத்தில் நடித்து வரும் ஆர்யா, அடுத்து மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் ‘கிரேட் ஃபாதர்’ என்ற மலையாள படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவெ ‘உறுமி’, ‘டபுள் பேரல்’ ஆகிய மலையாள படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ள ஆர்யா, ‘கிரேட் ஃபாதரி’ல் படம் முழுக்க வரும் பவர்ஃபுல் வில்லனாக நடிக்கிறாராம். அறிமுக இயக்குனர் ஹனீஃப் அடேனி இயக்கும் இப்படத்தில் மற்றுமொரு கோலிவுட் பிரபலமும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அறிமுகமாகிறார். அவர் ஸ்னேகா! ஏற்கெனவே இரண்டு மலையாள படங்களில் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள ஸ்னேகா தான் ‘கிரேட் ஃபாதரி’ல் மம்முட்டிக்கு ஜோடி! திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த சினேகா இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் என்ட்ரியாகிறர். ஃபேமிலி டிராமாவாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;