முழுக்க முழுக்க லாஸ் வேகாஸில் படமாகும் ஷாமின் ‘காவியன்’

ஷாமுடன் ஹாலிவுட் கலைஞ்ரகள் இணையும் ‘காவியன்’

செய்திகள் 24-Aug-2016 9:59 AM IST VRC கருத்துக்கள்

ஷாம் கதாநாயகனாக நடிக்க, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் படம் ‘காவியன்’. இப்படத்தில் ‘மனம் கொத்தி பறவை’ படப் புகழ் அத்மியா, ஸ்ரீதேவி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர்கள் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் பார்த்தசாரதி இயக்கி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 45 நாட்கள் படமாகவுள்ளது. "2M cinemas" K.V. சபரீஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஷ்யாம் மோகன் இசை அமைக்கிறார். மேலும் பல ஹாலிவுட் கலைஞ்ரகளும் இப்படத்தில் பணியாற்றுகிறார்களாம். முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (LAS VEGAS) படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுதான் என்கின்றனர் படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியன் - டீசர்


;