ஒரு நாள் தள்ளி ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் ரெமோ!

ரிலீஸ் தள்ளிய ‘ரெமோ’

செய்திகள் 23-Aug-2016 11:29 AM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படம்! ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது இப்படம். இப்படத்தின் லோகோ வெளியீடு, டிரைலர் வெளியீடு, பாடல்கள் வெளியீடு என ஒவ்வொன்றையும் வித்தியாசமான முறையில் நடித்தி அசத்திய இப்படக் குழுவினர் படத்தின் வெளியீட்டிலும் ஒரு புதிய முயற்சியை கையாள முடிவு செய்திருக்கிறார்கள். வழக்கமாக பெரிய நட்சத்திரக்கள் நடிக்கும் படங்கள் இங்கு வெளியாகும் நாளிலேயே வெளிநாடுகளிலும் வெளியாவது வழக்கம். ஆனால் ‘ரெமோ’வை பொறுத்தவரையில் இந்தியாவில் வெளியாகி ஒரு நாள் கழித்து தான் ‘ரெமோ’வை வெளிநாடுகளில் வெளியிட இருக்கிறார்கள். இதற்கு காரணம், பெரும்பாலும் பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் பைரசி வெளிநாடுகளில் இருந்து தான் முதலில் வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்துடனே ‘ரெமோ’ குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர். வரவேற்கத்தக்க இந்த முயற்சி இனி வரும் காலங்களில் மற்ற பட தயாரிப்பாளர்களும் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;