‘உதயா கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரித்துள்ள படம் ‘மேல் நாட்டு மருமகன்’. இப்படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்க, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆன்ட்ரீயன் என்ற வெள்ளைக்கார பெண் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் வி.எஸ்.ராகவன், அஞ்சலி தேவி, அசோக் ராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் எம்.எஸ்.எஸ்.
‘வெளிநாட்டில் போய் வேலை செய்து பணம், புகழ் அடைந்தாலும் நம் நாட்டு கலாச்சாரம் தான் சிறந்தது’ என்ற கருத்தை கூறும் இப்படத்திற்கு வெ.கிஷோர் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. அப்போது இப்படத்திற்கு பாடல் எழுதிய மறைந்த நா.முத்துக்குமார் பற்றி இயக்குனர் பேசும்போது,
’‘இந்த படத்திற்காக நா.முத்துக்குமார் அவர்களிடம் ஒரு பாடல் எழுத கேட்டேன். அப்போது அவர் நான் அமெரிக்கா போகிறேன், வந்து எழுதுகிறேன் என்றார். அவசரம் என்றால் வேறு யாரையாவது எழுதி தரச் சொல்லி வாங்கிக்குங்க’ என்றார். நீங்கதான் எழுதணும்னு வற்புறுத்தினேன். நிலைமையை புரிந்த அவர் அவரது காரில் என்னை அழைத்துச் சென்று 33 நிமிடங்களில் பாட்டெழுதி கொடுத்து விட்டார். ஓடும் காரிலேயே பாட்டெழுதி தந்த அந்த நட்பையும், நண்பனையும் இழந்து நிற்கிறது இந்த படக்குழு. அவர் உடலால் மறைந்தாலும் அவரது புகழும், பெயரும் தமிழ் இருக்கிற வரை நிலைத்து நிற்கும்’’ என்றார் இயக்குனர் எம்.எஸ்.எஸ். கண்கலங்கியபடி!
டென்மார்க் நாட்டு தமிழ் இளைஞர் சஜன் கதாநாயகனாக நடிக்க, லண்டன் வாழ் தமிழர் நிரோ பிரபாகர் இசை...
கார்த்தி நடித்த ‘சகுனி’, விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’, ‘வேலாயுதம்’, தனுஷ் நடித்த ‘உத்தமபுத்திரன்’...
கவிஞர் நா.முத்துக்குமாரின் திடீர் மறைவை தொடர்ந்து அவர் பற்றி சமூகவலை தளங்கள் மற்றும் ஊடங்களில் அவரது...