ரிலீஸ் தேதி குறித்த உதயநிதி படம்!

கிறிஸ்துமஸ் வெளியீடாக உதயநிதி படம்!

செய்திகள் 23-Aug-2016 10:41 AM IST VRC கருத்துக்கள்

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. சென்னை படப்பிடிப்பை தொடர்ந்து காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பிரதேசங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் எழிலின் ஆஸ்தான காமெடி நடிகர் சூரியும் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரெஜினா காசண்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எழில் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்து வரும் டி.இமானே தான் இசை அமைப்பாளர். உதயநிதி ஸ்டாலினுடன் எழிலும், டி.இமானும் முதன் முதலாக இனையும் இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படப்பிடிப்பு வேலைகளை செய்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;