நம்பியார் – விமர்சனம்

நல்லவன் + கெட்டவன்!

விமர்சனம் 22-Aug-2016 6:22 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ganeshaa
Production : Golden Friday Films
Starring : Srikanth, Santhanam, Sunaina
Music : Vijay Antony
Cinematography : M. S. Prabhu
Editing : Vivek Harshan

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘நம்பியார்’ எப்படிப்பட்டவர்?

கதைக்களம்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு எம்.ஜி.ஆரும், ஒரு நம்பியாரும் இருக்கிறார். அதாவது ஒவ்வொருவருக்குள்ளும் நல்ல குணமும் இருக்கிறது கெட்ட குணமும் இருக்கிறது. ஆனால் அது ஒவ்வொருவரிடமும் சதவிகித அடிப்படையில் மாறுபடுகிறது. இந்த கான்சப்டை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

நாயகனாக வரும் ஸ்ரீகாந்துக்கு பெயர் ராமச்சந்திரன். அவருக்குள் இருக்கும் கெட்டவருக்கு நம்பியார் என்று பெயரிடப்பட்டு அவருக்கு உருவம் கொடுத்தவர் சந்தானம்! ஸ்ரீகாந்த் கலெக்டராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அவரது தந்தை! அதனால் ஐ.ஏ.எஸ். பரீட்சை எழுதுவதும் ஃபெயிலாவதுமாக இருக்கிறார் ஸ்ரீகாந்த்! இந்நிலியில திடீரென்று சந்திக்கும் சுனைனா மீது ஸ்ரீகாந்துக்கு காதல் வருகிறது. ஸ்ரீகாந்த் நல்ல காரியங்கள் செய்ய நினைக்கும்போதெல்லாம் அவருக்குள் இருக்கும் கெட்டவரான சந்தானம் வந்து அதையெல்லாம் கெடுத்து விடுகிறார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் எப்படி சந்தானத்திடமிருந்து தப்பித்து வாழ்க்கையில் வெற்றி காண்கிறார் என்பது தான் ‘நம்பியார்’ படத்தின் கதை.

படம் பற்றிய அலசல்!

நடிகர் பார்த்திபனின் அறிமுக உரையுடன் படம் துவங்குகிறது. ஒருவருக்குள் இருக்கும் இரண்டுவித குணாதிசயங்களை கதைக்களமாக வைத்து அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கியுள்ள இப்படம் ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது. முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக பயணித்தாலும் பிற்பாதி விறுவிறுப்பு, கலகலப்பு என்று பயணிப்பதால் போரடிக்கவில்லை. சந்தானத்தின் பேச்சை கேட்டு ஸ்ரீகாந்த் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் அவருக்கு எதிராகவே முடிவது தான் படத்தின் ஹைலைட்ஸ்! ஆனல் அதை அதிகபடியான லாஜிக் மீறல்களுடன் படமாக்கியிருப்பது படத்திற்கு மைனஸாக அமைந்துள்ளது. விஜய் ஆண்டனியின் இசையும், எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. ஆனால் படத்தொகுப்பாளரின் பணி குறிப்பிடும்படி அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

ஸ்ரீகாந்த் முற்றிலும் வித்தியாசமான ஒரு கேரக்டரில் தோன்றி தனது இயல்பான நடிப்பால் அவரது பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார். ஸ்ரீகாந்துடன் படம் முழுக்க வரும் சந்தானம் படத்தின் இன்னொரு கதாநாயகன்! ஜாலியான பயணத்துக்கு பெரிதும் உதவியிருக்கிறார். ஸ்ரீகாந்த் காதலிக்கும் சரோஜா தேவியாக வரும் சுனைனா அழகிலும், நடிப்பிலும் குறை வைக்கவில்லை. ஸ்ரீகாந்தின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ், அண்ணன், அண்ணியாக வரும் சுப்பு பஞ்சு, திவ்யதர்ஷினி ஆகியோர் ஸ்ரீகாந்திடம் அடி வாங்கும் காட்சிகள் கலகல ரகம்! அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1.கதைக்களம்
2.ஸ்ரீகாந்த், சந்தானம்

பலவீனம்

1.ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி
2. நம்ப முடியாத சில காட்சி அமைப்புகள், லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில்…

ஒருவருக்குள் இருக்கும் இரண்டுவித குணாதியசங்களை வித்தியாசமான ஒரு கதைகளத்தில் சொல்லப்பட்டிருக்கும் இப்படம் ரசிகர்களை கவர வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : நல்லவன் + கெட்டவன்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐங்கரன் ட்ரைலர்


;