‘செவாலியர்’ கமல்ஹாசனுக்கு சிவகுமார், சூர்யா, கார்த்தி வாழ்த்து!

‘செவாலியர்’ கமல்ஹாசனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

செய்திகள் 22-Aug-2016 5:27 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயர் விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நேரிலும், தொலைபேசி மூலமாகவும், இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன! நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தொடர்ந்து ‘செவாலியர்’ விருது பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருப்பதில் ‘‘எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதைப் போல நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோரும் ‘செவாலியர்’ கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். செவாலியர் விருது கிடைத்துள்ள கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. இதனை நேற்று நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;