சமீபத்தில் வெளியாகி பெரும் பாராட்டுக்கள் பெற்று வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் ‘ஜோக்கர்’ தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி என்று சொல்லலாம்! இப்படத்தை இயக்கிய ராஜுமுருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு, நிறைய பட வாய்ப்புக்களும் தேடிவந்த வண்ணம் உள்ளன! இந்நிலையில் அவர் தனது அடுத்த படம் குறித்து பேசுகையில்,
‘‘ ஜோக்கர்’ திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் ஆசை இருக்கிறது. தெலுங்கிலும் என்னை ரீமேக் செய்ய சொல்லி நிறைய பேர் கேட்கிறார்கள். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதற்கான சரியான முயற்சிகள் போய் கொண்டு இருக்கிறது. முதலில் எந்த மொழியில் ஜோக்கர் ரீமேக்கை இயக்குவீர்கள் என்று கேட்கிறார்கள். அதை பற்றி இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான விஷயங்கள் அமையும்போது அதை பண்ண வேண்டும்.
என்னுடைய அடுத்த படத்திற்கான கதையை எழுதி கொண்டு இருக்கிறேன். அடுத்த படத்திற்கான கதை முற்றிலும் வேறு ஒரு களத்தில் பயணிக்கும் ஒரு கதையாக இருக்கும். ‘குக்கூ’ ஒரு அழகான காதல் கதை. ‘ஜோக்கர்’ சமூக அவலங்களை பற்றி பேசும் படம். என்னுடைய அடுத்த படம் இதில் இருந்து முற்றிலும் வேறு களத்தில் இருக்கும். அந்த கதையை நான் இன்னும் எழுதி கொண்டு தான் இருக்கிறேன். கதை முழுவதும் எழுதி முடித்த பின்னர் தான் அதை பற்றி கூற முடியும்.நிறைய தயாரிப்பாளர்கள் படம் இயக்க சொல்லி கேட்டுள்ளார்கள். எல்லாம் முடிவானதும் அதை பற்றி சொல்கிறேன்.
நான் என்னுடைய இயக்குநர் லிங்குசாமி அவர்களிடமிருந்து நிறைய கற்றுள்ளேன். அவர் ‘ஜோக்கர்’ படத்தை பார்த்துவிட்டு ராஜுமுருகன் என்னிடமிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை. நான் தான் அவரிடமிருந்து கற்றுள்ளேன்’’ என்று கூறியது அவருடைய பெருந்தன்மையை காட்டுவதாகும்! ஜோக்கரை பார்த்துவிட்டு யாரும் எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேபோல் எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. நான் பெரிதும் மதிக்கக் கூடிய, விரும்பக் கூடிய தலைவரான திரு.நல்லகண்ணு அய்யா ‘ஜோக்கரை’ பார்த்துவிட்டு எனக்கு அழகான ஒரு பரிசை அளித்தார். அதில் அழகான ஒரு வாசகம் இருந்தது. “ விதைத்து கொண்டே இருப்போம், முளைத்தால் மரம் இல்லையென்றால் உரம்’’ என்று! அதேபோல் இன்றைய காலகட்டத்து இளைஞர்களுக்கு முன் மாதிரியாக இருக்க கூடிய சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு, “ சமூக அவலங்களுக்கு எதிரான சரியான படம்’’ என்றார். சமூக தளத்தில் இயங்கி கொண்டிருக்க கூடிய திருமாவளவன் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு பெரிதும் பாராட்டினர். இதை போன்று நான் விரும்பும் தலைவர்கள் பலர் படத்தை பார்த்துவிட்டு என்னை பாரட்டினர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் படத்தை பார்த்துவிட்டு, “ரொம்ப ரொம்ப தில்லான படம். ரொம்பவும் நல்லா பண்ணியிருக்கீங்க, நிச்சயம் நாம் சந்திப்போம்’’ என்று கூறினார்’’ என்றார் இயக்குனர் ராஜுமுருகன்.
சூர்யா நடித்து வரும் படங்கள் ‘NGK’ (நந்த கோபால குமரன்) மற்றும் ‘காப்பான்’. இதில் ‘NGK’ படத்தை...
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘NGK’ படத்தின் டீஸர் காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி...
பாலா இயக்கிய, ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, ராஜு முருகன் இயக்கிய ‘ஜோக்கர்’ உட்பட பல படங்களின்...