வில்லன் நடிகராக அறிமுகமாகி தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவர் ‘மொட்டை’ ராஜேந்திரன். திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூகவலைதளங்கள் எதிலுமே அங்கம் வகிக்காதவர். ஆனால் அவர் பெயரில் போலி ஆசாமிக்ள் ட்விட்டரில் (@Rajendran_offl என்ற பெயரில்) கணக்கை துவங்கி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் வளர்ந்து வருவதை தொடர்ந்து இன்று காலை ‘மொட்டை’ ராஜேந்திரன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இது சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். ‘மொட்டை’ ராஜேந்திரனின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இதனை ‘மொட்டை’ ராஜேந்திரன் சார்பில் தெரிவித்துள்ளனர்.
‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ் இப்போது இயக்கி வரும் படம் ‘நீயா-2’. இந்த படத்தில் ஜெய் கதையின்...
இயக்குனர் சுந்தர்.சி.யும், சிம்புவும் முதன் முதாலாக இணைந்துள்ள படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’....
‘வெற்றிவேல்’, ‘சிவலிங்கா’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்க, அறிமுக...