ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. ‘2 MOVIE BUFF’ என்ற நிறுவனமும் 'ACROSS FILMS' என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘கயல்’ சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘பிச்சைக்காரன்’ பட புகழ் சாதனா டைட்டஸ் கதாநாயகியாக நடிக்கிரார். இவர்களுடன் பார்த்திபன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போலவே சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை கலை இயக்குனர் ரெமியன் தன்னுடைய மனதில் களவாடி, சென்னை நுங்கம்பாக்கத்தில் அதைப் போன்று ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை ‘திட்டம் போட்டு திருடுற கூட்ட’த்திற்காக வடிவமைத்துள்ளார். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ உள்ளிட்ட பல படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்த ரெமியன் அமைத்துள்ள இந்த பிரம்மாண்ட செட், அவருக்கு மேலும் புகழை தேடி தரும் என்கிறார்கள்!
‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து இப்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு இந்த அருங்காட்சியக பிரம்மாண்ட செட்டில் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவுக்கு ஜோ மார்ட்டின், இசைக்கு அஷ்வத், படத்தொகுப்புக்கு வெங்கட், ஸ்டன்ட் இயக்கத்துக்கு ‘பில்லா’ ஜெகன் என கூட்டணி அமைத்து சுதர்சன் இயக்கி வரும் இப்படம் ரசிகர்களுக்கு மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘கயல்’ சந்திரன், சாதனா டைடஸ் இணைந்து நடித்துள்ள ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ விரைவில் வெளியாகும்...
வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மிர்ச்சி’ சிவா, ‘கயல்’ சந்திரன், ஷாம், சத்யராஜ, ஜெயராம், ரம்யா கிருஷ்ணன்,...
‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்து இயக்கும் படம் ‘டாவு’. இந்த படத்தில் ‘கயல்’...