ரிலீஸ் தேதி குறித்த விக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி’

விக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 22-Aug-2016 10:09 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘தகராறு’ படப் புகழ் கணேஷ் விநாயக் இயக்கியுள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து ‘வீரசிவாஜி’யை அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ஆம் தேதி ரிலீஸ் செய்யவும் முடிவு செய்திருக்கிறார்கள். ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்று கூறப்படுகிறது. விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வாகா’. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘வீரசிவாஜி’யின் ஒளிப்பதிவை சுகுமார் கவனிக்க, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;