25-ஆம் தெதி ‘றெக்க’யின் சாம்பிள் ட்ரீட்!

விஜய்சேதுபதியின் ‘றெக்க’ டீசர் ரிலீஸ் தேதி!

செய்திகள் 22-Aug-2016 10:03 AM IST VRC கருத்துக்கள்

விஜய்சேதுபதியின் ‘தர்மதுரை’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க அவர் நடித்து வரும் ‘றெக்க’ பட வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லக்‌ஷ்மி மேனன் நடித்து வருகிறார். டி.இமான் இசை அமைக்கிறார். பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்கிறார். கார்த்தியின் ‘காஷ்மோரா’, விஷாலின் ‘கத்திச்சண்டை’ தனுஷின் ‘கொடி’ ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்துள்ள நிலையில் விஜய்சேதுபதியின் ‘றெக்க’யும் தீபாவளி ரேசில் களமிறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பட வேலைகளை படு விறுவிறுப்பாக மேற்கொண்டு வரும் இப்படக்குழுவினர் இப்படத்தின் டீசரை வருகிற 25-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ‘காமன் மேன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரித்து வரும் ‘றெக்க’யில் கிஷோர், ஹரிஷ் உத்தமன், சதீஷ், கபீர் துஹான் சிங் முதலானோரும் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;