‘மாயா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பாக உருவாகி வருகிறது மாநகரம். அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷான், ஸ்ரீ, ரெஜினா கெஸன்ட்ரா, ராமதாஸ், சார்லி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஜாவித் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்னையை கதைக்களமாகக் கொண்டு ‘ஹைபர் லிங்க்’ ஸ்டோரியாக உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 22ஆம் தேதி வெளியிட உள்ளனர். சென்னையைப் பின்னணியாகக் கொண்ட படமாக ‘மாநகரம்’ உருவாகியிருப்பதால், ‘மெட்ராஸ் டே’ தினமான ஆகஸ்ட் 22ஆம் தேதியை தங்களின் பாடல் வெளியீட்டிற்காகத் தேர்வு செய்திருக்கிறதாம் படக்குழு.
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
‘துருவங்கள் பதினாறு’ படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த்சாமி,...
தமிழ் சினிமாவில் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பாக...