சூர்யாவுடன் ‘சிங்கம்-3’யில் மோதும் வில்லன் யார்?

சூர்யாவுடன் ‘சிங்கம்-3’யில் மோதும் வில்லன் யார்?

செய்திகள் 20-Aug-2016 3:07 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் ர்சூர்யாவும், இயக்குனர் ஹரியும் ஐந்தாவது முறையாக இணைந்துள்ள ’சிங்கம்-3’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனுஷ்கா ஸ்ருதிஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் வில்லனாக நடிக்க பொருத்தமான ஒரு நடிகரை தேடி வந்தார்கள்! ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் பல நடிகர்களை பரிசீலனை செய்த படக்குழுவினர் கடைசியாக மும்பையை சேர்ந்த கட்டு மஸ்தான உடல் அமைப்பை கொண்ட தாக்கூர் அனூப் சிங் என்பவரை ‘சிங்கம்-3’யில் வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். சூர்யாவுடன் தாக்கூர் அனூப் சிங் மோதும் படு பயங்கர சண்டை காட்சிகள் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் விரைவில் படமாகவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ப்ரியன் கவனிக்க, இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்’ பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;