‘ஃபேஸ்புக்’ ஒரு முக்கிய பாத்திரமாகும் ‘ஒரு முகத்திரை’

சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாகும் ‘ஒரு முகத்திரை’

செய்திகள் 20-Aug-2016 11:36 AM IST VRC கருத்துக்கள்

செந்தில்நாதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘ஒரு முகத்திரை’. ரஹ்மான், சுரேஷ், அதிதி ஆச்சார்யா, தேவிகா, ஸ்ருதி, டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், பாலாஜி, ரேகா சுரேஷ், பாண்டு முதலானோர் நடிக்கும் இப்படத்தில் கதையின் நாயகனாகவும், வில்லனாகவும் வருவது ‘ஃபேஸ்புக்’ எனும் சமூக வலைதளம் தான் என்கிறார் இயக்குனர் செந்தில்நாதன். ஒரு சைக்காலஜிக்கல் டாக்டர், சைக்காலஜிக்கல் ஸ்டூடண்ட், ஐடி துறையில் வேலை செய்யும் இளைஞர் இவர்களை சுற்றி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். சைக்காலஜிக்கல் டாக்டர் சைக்கோவானால் என்ன நிகழும் என்பதை பரபரப்பான காட்சிகளுடன் சொல்லும் இப்படத்திற்கு சரவணபாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரேம் குமார் சிவபெருமான் இசை அமைக்கிறார். இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;