சிவகார்த்தியேனுடன் இணையும் சமந்தா!

ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷை தொடர்ந்து சமந்தா!

செய்திகள் 20-Aug-2016 11:24 AM IST VRC கருத்துக்கள்

‘ரெமோ’வில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன் அடுத்து மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படம் முடிந்ததும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கவிருக்கிறார். மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கேரக்டரில் ஃபஹத் ஃபாசிலும் நடிக்கிறார். இந்நிலையில் பொன்ராம் இயக்கும் படத்திற்கான கதாநாயகி நடிகையும் முடிவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீதிவ்யா, ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ், நயன்தாராவை தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா ஜோடி சேரவிருக்கிறாராம். இது சம்பந்தமான அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;