மக்கள் ஜனாதிபதியை பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்த தியேட்டர்!

‘ஜோக்கரை’ 10 ரூபாய் கட்டணத்தில் கண்டு களிக்க ஏற்பாடு!

செய்திகள் 20-Aug-2016 11:08 AM IST VRC கருத்துக்கள்

அண்மையில் வெளியாகி ஏராளமான பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜோக்கர்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பான இப்படத்தை ‘குக்கூ’ படப் புகழ் ராஜுமுருகன் இயக்கியுள்ளார். இப்படம் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வித்தியாசமான முறையில் இப்படத்தை விளம்ரப்படுத்தி வருகிறார்கள். இதனால் இப்படத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவும் பெருகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தை அனைவரும் குறைந்த கட்டணத்தில் கண்டு களிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீராமஜெயம் தியேட்டர் நிர்வாகத்தினர் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்த தியேட்டரில் நடைபெறவிருக்கும் ஜோக்கரின் 4 காட்சிகளுக்கும் ரசிகர்களிடமிருந்து 10 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவுள்ளது. நல்ல சினிமாவை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கமாக இந்த தியேட்டர் நிர்வாகத்தினரின் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;